கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மரண அறிவித்தல்

>> Wednesday, 10 August 2016


திரு பாலசுப்பிரமணியம் தம்பிராசா

பிறப்பு : 17 செப்ரெம்பர் 1957 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2016
மன்னார் -கள்ளியடி

மன்னார் கள்ளியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் தம்பிராசா அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

Read more...

மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய துர்முகி வருஷ அலங்கார உற்சவ விழா-முழுமையான படங்கள் இணைப்பு....

>> Sunday, 24 July 2016

மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய துர்முகி வருஷ அலங்கார உற்சவ விழா 13-07-2016-23-07-2016 மிகவும் சிறப்பாக நிறைவுபெற்றது.
மாதோட்டம் எனும் மன்னார் மண்ணிலே திருக்கேதீச்சரப்பதிகத்தில் அமைந்துள்ள கள்ளியடி கற்பகப்பிள்ளையார்-இலக்குமிதாயார்-பாலமுருகன்-நவநாயகர்-வைரவர்-சண்டீஸ்வரர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு நிகழும் மங்கலகரமான துர்முகி வருடம் ஆனி-30ம்நாள் (13-07-2016) புதன் கிழமை காலை 9-00 மணி முதல் ஆரம்பமாகி தினமும் விநாயகர் வழிபாடு கணபதி ஹோமம் அபிஷேகம் விசேட பூஜை நடைபெற்று பக்தர்கள் அலகு குத்தி கற்பூரச்சட்டி எடுக்கவும் பால் குடம் ஏந்தியதோடு அங்கப்பிரதட்சனம் செய்து நிவர்த்தி செய்தனர் அன்னதானம் வழங்கப்பட்டு வந்ததோடு…..
பூர்த்தி தினமான ஆடி 8ம் நாள் (23-07-2016) சனிக்கிழமை சதய நட்சத்திர நன்னாளில் பகல் 108 சங்காபிஷேக பூஜையுடன் அன்னதானமும் அத்தோடு மாலை  விசேட பூஜை கூட்டுப்பிராத்தனை வசந்த மண்டப பூஜை உள்வீதி வெளி விதி உலா திருவருட்பிரசாதம் வழங்கல் என்பன நிகழ்ந்து இரவு விசேட பூஜை கூட்டுப்பிராத்தினை வசந்த மண்டப பூஜையைத்தொடர்ந்து விநாயகப்பெருமான் திரு ஊஞ்சலாடி பக்தர்களை மகிழ்வித்ததோடு  மின்னொளியும் நிலவொளியும்  கலக்க வாத்தியங்கள் இசை முழங்க பக்கதர் கோடிகளின் நடுவே உள்வீதி வெளிவீதி உலா வந்து அருங்காட்சியாகவும்  சிறப்பாகவும் அமைந்ததோடு விநாயகப்பக்த அடியார்கள் கற்பக விநாயகரின் திருவருளை நிறைவாக பெற்று மகிழ்ந்தனர்.


Read more...

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP